Monday, May 18, 2009

நானும் அவனும் ...

சுந்தர் மூலம் எனக்கு அறிமுகமான அவனை எனக்கு கண்டவுடனே பிடிக்கவில்லை ..காரணம் தற்காலிகமாக தங்கி இருக்கும் இடத்தில் தேவை இல்லாத புதிய பழக்கங்கள் கூடாது என்ற முடிவில் நான் இருந்தது தான். அவன் எங்கிருந்து வந்தான் , எங்கு தங்குகிறான் என்று கூட எனக்கு கேட்க தோன்றவில்லை ..ஆனாலும் சுந்தர் என்னை விடுவதாய் இல்லை ..அவனை பற்றி என்னிடம் சுந்தர் கூற ஆரம்பிக்கும் போது....அவனே எங்களை விட்டு நகர்ந்து சென்று விட ...சௌகரியமாய் நானும் நழுவி விட்டேன். ...
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது எங்கள் வீட்டு வாசலில் அவன் நின்று கொண்டிருந்தான். ஒருவேளை சுந்தருக்காக காத்து கொண்டிருகிரானோ??சுந்தர் மதுராவை மடிவாலாவில் இறக்கி விட்டு கிறங்கி போய் வர இன்னும் பல மணி நேரங்கள் இருக்க ....அவனை பார்காதது போல் வீட்டுக்குள் சென்று விட முடிவு செய்து ..வீட்டு கேட்டை திறக்கும் போது ...தான் வந்திருப்பதை உணர்த்த என்னருகே வந்தான்..நான் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விட்டேன் ....
இரவு எட்டு மணிக்கு சுந்தர் கையில் பையுடன் வந்து...அவனை பார்த்தியா என்று கேட்க ..நான் தெரியவில்லை என பதில் அளிக்க ...பெருமாள் பார்த்தாய் சொன்னான் என என்னை பார்க்க...என கண்ணில் படாமல் போய் இருக்கலாம் என்று பட்டும் படாமல் கூறிவிட்டேன்....சுந்தருக்கு பலத்த ஏம்மாற்றம் ............. பாசத்தை பொழிந்த பின் ஏமாற்றத்தை தங்கி கொள்ள மனம் இல்லாமல் தான் அவனை நான் கண்டு கொள்ளவே இல்லை ...சின்ன வயதில் இருந்து நம்முடன் வளர்ந்து வருபவனே என்னை விட்டு விட்டு சென்ற அனுபவம்....திடிரென்று வந்து நிற்கும் இவனிடம் பழகுவது எனக்கு சரியாய் படவில்லை என்று நினைத்து கொண்டே தூங்கி போன எனக்கு...திடிரென்று சுந்தரும் அவனும் வெளியில் விளையாடி கொண்டிருக்கும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்துவெளியே வந்தேன் . என்னை பார்த்ததும் சகஜமாய் அருகில் வந்து பாவனை மூலம் விளையாட அழைத்தான்...நான் யோசித்து கொண்டிருக்கும் போதே....சுந்தர் டீ குடிக்க அழைக்க ..நானும் 'யான் பெற்ற இன்பம் பெருக வித் கோவிந்தும் ' என்ற எண்ணத்தில் தூங்கி கொண்டிருந்த கோவிந்தை இரவு பன்னிரண்டு மணிக்கு எழுப்பி எங்கள் 'டீ கடை தேடும் படலத்தில்' சேர்த்து கொண்டோம்..
சுந்தரும் கோவிந்தும் முன்னால் செல்ல ..நான் சற்றும் எதிர் பாராத வகையில் என்னுடன் அவன் சிநேகமாய் வந்தான் ...ஒருவேளை என்னிடம் இருக்கும் பிஸ்கட்காக வருகிறான் என்று சிறுபிள்ளை தனமாய் தோன்றியது ...அதே நொடியில் முன் சென்று கொண்டிருந்த கோவிந்து பின் திரும்பி என் கையில் இருந்த பிஸ்கட் பாக்கட்டை அபகரித்துக் கொண்டு மீண்டும் முன் தொடர்ந்தான்....சுந்தர் சுவாரஸ்யமாய் இன்றும் என்றும் போல மதுராவுடன் சென்று வந்த காதல் படலத்தை பகிர்ந்து கொண்டிருக்க ...கோவிந்தும் தான் அசட்டு சிரிப்புடன் கேட்டு கொண்டே நகர்ந்தான் ...இப்போதும் அவன் என்னுடனே வந்து கொண்டிருக்க ..அவன் கண்களை பார்த்த போது... குற்ற உணர்ச்சியில் நடப்பதை மறந்து நின்று விட்டேன் ...அவனும் திரும்பி பார்க்க ...என் மனம் இளகியது ..பாசத்தோடு அவனிடம் முதல் சிநேகத்தை வளர்க்க நினைத்து கையில் மீதமிருந்த பிஸ்கட்டை காட்டி அவனை அழைக்க ...திடிரென்று எதையோ கண்டு தன் நான்கு கால் பாய்ச்சலில் ரோட்டை தண்டி அவன் ஓட நிசதமாய்இருந்த அந்த ரோட்டில் ஒரு காரின் சக்கரத்தில் அடிபட்டு துடிதுடிக்க இறந்து போன அவனை ..அந்த நாயை கண்டு பின் வந்த நானும் முன் சென்ற என் நண்பர்களும் பேச்சற்று நின்றோம்..............................................

2 comments:

J.Jean Sehhaastian Mithun said...

Itz really good... jus lik 101 dalmation...!!!!!!!!!!!

சுரேந்திரா said...

Neeyum valaipakkam ezhudha aarambithiruppadhu mikka magizhchi... Varuga Varuga!!